Thursday, 31 May 2012

உங்கள் iPad-ஐப் பாதுகாக்க பயனுள்ள வன்பொருள்கள்...


வணக்கம் நண்பர்களே.. ! நம்மில் பலர் ஐபேடைப்(iPad) பயன்படுத்தி வருவோம். இந்த ஐபேடின் செயல்படும் திறனை மேம்படுத்த சில வன்பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

iPad carrying case
Sena Keyboard Folio நிறுவனத்தின் தோலினால் ஆன iPad carrying case இதுவாகும். நம்முடைய iPod-ஐ பாதுகாக்க இது உதவும். இந்த iPad carrying case-ன் சந்தை விலை 150$ டாலராக இருக்கிறது.

iPad Camera Connection Kit
Apple நிறுவனத்தாரின் தயாரிப்பு இது. இந்த iPad Camera Connection Kit ஒரு digital camera ஆகும். இது smart phone, teblet pcக்களை விட இதில் சிறந்த முறையில் படமெடுக்க முடியும். இது ஆதரிக்கும் கோப்புகள் jpeg, raw images, SDvideo, HD video ஆகிய கோப்பு முறைமைகளை ஆதரிக்கும். இதன் விலை 29$ டாலர் ஆகும்.


மனதை கொள்ளைக் கொள்ளும் Google Drive கூடுதல் தகவல்களுடன்..!

வணக்கம் நட்புகளே..! தற்போது கூகுள் ட்ரைவ்..கூகிள் ட்ரைவ்..Google Drive... என அடிக்கடி இணையத்தில் கேள்விப்படுகிறோம். இந்த கூகிள் ட்ரைவ் கணினியில் உள்ள Hard Drive மாதிரியா? இல்லை வேறு மாதிரியா? இது எப்படி இருக்கும். ?  இந்த கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இந்த கூகுள் ட்ரைவினால் என்ன பயன்?இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பவைதான் இப்பதிவு.

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

நமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க வைக்ககூடிய வசதியைத் தருவதுதான் இந்த கூகிள் ட்ரைவ். கூகிள் இதற்கு முன்பே google docs என்ற தளத்தின் மூலம் கோப்புகளை சேமிக்க வசதியை அளிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதையே சற்று மேம்படுத்தி Google Drive என்ற சேவையாக கொடுத்திருக்கிறது. இதை Cloud storage service என அழைக்கின்றனர்.

Tuesday, 29 May 2012

பிளாக்கருக்கான புதிய டெம்ப்ளேட்கள் - அறிமுக பகுதி-1

வணக்கம் நண்பர்களே..தொடர்ந்து பதிவுகளை எழுதி வருவது என்பது கூடுதல் சவால்தான்.. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் நல்ல தரமான மென்பொருள்களைத் தேடிப்பெறுவதில் உள்ள சிரமம் அதிகம். அதை எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் நமது software shops தளம். இதில் பல பயனுள்ள மென்பொருள்களையும், ஒருசில பிளாக்கர் தொடர்பான பதிவுகளையும் வெளியிட்டுவருகிறோம் என்பது நண்பர்களாகிய உங்களுத் தெரியும். அதைப்போன்றதொரு பணிதான்..இனி பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் தளங்களுக்குத் தேவையான வார்ப்புருக்களைத் தேடித்தரும் பணி..

இப்பணியின் தொடக்கமாகத்தான் இந்தப் பதிவு அமையப்போகிறது. உங்கள் பிளாக்கர் தளங்களுக்குத் தேவையான Blogger templateகள் அணிவரிசை செய்து கொடுகக்போகிறேன்.

Monday, 28 May 2012

ஒரே கிளிக்கில் ஏழு தேடுபொறிகளுக்கான முடிவுகளைப் பெற....

வணக்கம் நண்பர்களே...! சர்ச் என்ஜின் என்றால் என்ன?. நாம் இணையத்தில் ஏதாவது ஒன்றைப் பற்றி தேடிபெற உபயோகமாக இருப்பதுதான் இந்த சர்ச் என்ஜின்(Search Engine) என்ற தேடல் இயந்திரம்.

seven search engines result in one page
இந்த தேடல் இயந்திரம் அல்லது தேடுபொறியில் முதல் இடத்தைப் பெறுவது சந்தேகமே இல்லாமல் கூகிள் சர்ச் என்ஜின்தான்(Google Search Engine). உலகின் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடு இயந்திரம் இது..

Thursday, 24 May 2012

உங்கள் photo -வை ஓவியமாக மாற்ற..

வணக்கம் நண்பர்களே..!

உங்களுடைய போட்டோக்களை ஒரே சொடுக்கில் ஓவியமாக மாற்ற முடியுமா? கருப்பு வெள்ளை ஓவியமாகவும், கலர்புல் ஓவியமாகவும் மாற்ற முடியுமா? நீங்கள் விரும்பிய Effect-களை அதில் கொண்டு வர முடியுமா?

முடியும் நண்பர்களே.. ! எல்லாமே ஒரே சொடுக்கில் சாத்தியம்தான்.  ஒரிஜினல் ஓவியத்தைப் போன்றதொரு தோற்றத்திற்கு உங்களுடைய புகைப்படத்தை கொண்டு வர முடியும். இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது.
வழிமுறைஒன்று:

 photo to drawing software

Android, iphone, nokia, windows mobile களுக்கு ஏற்ற புதிய மொபைல் பிரௌசர்

வணக்கம் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே..!

இணையத்தில் இல்லாத வசதிகளா? எத்தனை எத்தனை வசதிகளை இணையம் நமக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. இதில் மிகப்பல இலவசமாகவே கிடைப்பதுதான் இன்னும் நமக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய விஷயம்.

தமிழ்தளங்களை மொபைலில் சரியாக காணமுடியாது. தளமானது மொபைலில் பார்வையிடும்போது புள்ளி..புள்ளியாக.. கட்டம் கட்டமாகத்தான் தெரியும்.
new browser of android type mobiles

Tuesday, 22 May 2012

பவர் பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய

வணக்கம் நண்பர்களே..!

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன்பாடுகள் ஏராளமானவை.

ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்திதான் தங்களுது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

powerpoint to video convertor

Monday, 21 May 2012

இலவச இணைய உலவிகள் (Free Internet Browsers) டவுன்லோட் செய்ய

வணக்கம் எனதினிய அன்பு நண்பர்களே..! இணைய உலவிகள் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். இதுகூடவா தெரியாது?.. என்கிறீர்களா? ம்ம்.. தெரியும். ஆனால் இணைய உலவிகள் எத்தனை உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?. நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் உலவிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
Free internet browsers 
இணைய உலவிகளில் மிக முக்கியமானது என்று எடுத்துக்கொண்டால் Google chrome, firefox, மற்றும் internet explorer ஆகியவைகளைத்தான் குறிப்பிடுவோம் அல்லவா? இன்னும் ஒரு படி மேலே போய் கூடுதலாக ஒரு சில உலவிகளைப் பயன்படுத்தியிருப்போம். அவை Opera browser, safari, அதற்கு அடுத்து epic பிரௌசரை சொல்வோம்.

Sunday, 20 May 2012

உங்கள் தளத்திற்கு இலவச copy right பெறுவது எப்படி?

வணக்கம் நண்பர்களே..!

நேற்றையப் பதிவில் 'உங்கள் பதிவுகள் காப்பி செய்யப்படுகிறதா?' என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியானது அல்லவா? அதன் தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளுக்கு காப்பி ரைட் வாங்குவது எப்படி(how to get copy right online?) என்பதைப் பார்ப்போம். இணையத்தில் இலவசமாக இந்த காப்பிரைட் கொடுக்க சில தளங்கள் இருக்கின்றன. அவற்றில் http://myfreecopyright.com/ என்ற தளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.


இந்த தளத்தில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து உங்களுக்கான கணக்கைத் துவக்கிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும். அதில் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி அதிலுள்ள ஒரு இணைப்பை சொடுக்குவதன் மூலம் உங்களுக்குத் தேவையான காப்பிரைட் பெற முடியும். இது மிகவும் எளிதான ஒன்றுதான். இதனால் ஓரளவிற்கு உங்கள் வலைப்பதிவுகளைக் காக்க முடியும்.

Friday, 18 May 2012

உங்கள் பதிவுகள் காப்பி அடிக்கப்படுகிறதா..?

வணக்கம் நண்பர்களே.. தொடர்ந்து இருக்கும் வேலைப்பளு காரணமாக பதிவுகளைத் தொடர்ந்து எழுத முடியவில்லை. இன்றைய பதிவில் உங்களின் தளத்திலிருக்கும் பதிவுகளை பிறர் காப்பி அடிக்காமல் இருக்க ஒரு சில வழிமுறைகளைப் பார்ப்போம். இதற்கு இந்த தளம் மிகவும் உதவிகரமாக உள்ளது.
உங்கள் பதிவுகள் காப்பி அடிக்கப்படுகிறதா?

தளத்தின் பெயர்: tynt™ publisher tools

தளத்தில் என்ன சிறப்பு என்கறீர்களா? இருக்கிறது.. உங்கள் தளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், பதிவுகள், போன்ற உங்கள் சொந்த ஆக்கங்கள் பிறர் அவர்களின் தளத்தில் பதிவிடும் போது உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுக்காமலேயே விட்டுவிடுவார்கள் இல்லையா? அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவுகளை காப்பி செய்யும்போது இணைப்பு கொடுத்துவிட்டால்...

Sunday, 13 May 2012

நூற்றுக்கும் அதிகமான தளங்களிலிருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய - Download videos from more than one hundred sites

வணக்கம் நண்பர்களே...! தொடர்ந்து பதிவெழுத நேரம் கிடைத்தமைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். கனவு கண்டதுபோல ஒரு நாள் முழுமைக்கும் மின்விநியோகம் செய்தமையே தொடர்ந்து பதிவெழுத காரணம். சரி. பதிவிற்கு வருவோம்.

ஒரு சில மென்பொருள்கள் வீடியோக்களை பதிவிறக்கம்ம செய்ய பயன்பட்டாலும், இந்த மென்பொருளில் உள்ள சிறப்புகள் ஏராளம். இதில் youtube, metacafe, MySpace, Dailymotion, Megavideo, Google, Yahoo!, Metacafe, Spike, Megarotic (unlimited), Yahoo!, CBS, Comedycentral, MyPlay, Globo, RTVE போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Saturday, 12 May 2012

ஜிமெயிலில் அட்டாச்மெண்ட் லோகோவை மாற்ற


வணக்கம் நண்பர்களே..! மற்றுமொரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். இன்றைய பதிவில் ஜிமெயிலில் வரும் அட்டாச்மெண்ட் லோகோவிற்கு பதிலாக மெயிலில் இணைக்கப்பட்டிருக்கும் கோப்புகளின் லோகோவை அட்டாச்மெண்ட் லோகாவாக மாற்றுவது எப்படி என பார்க்கலாம். மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோப்பு எந்த வகையான கோப்புகள் என மெயிலைத் திறக்காமலேயே காண முடியும். வழக்கமாக அட்டாச்மென்ட் கோப்புகளைக் காட்ட ஊக்கு (Pin) போன்ற படமே இருக்கும். இனி அந்த படத்திற்குப் பதில் மின்னஞ்சலோடு இணைக்கப்பட்ட கோப்புகளின் logo படங்களையே அட்டாச்மெண்ட் லோகோவாக காட்டுமாறு செய்யலாம். அதற்கு இந்த ஆட்ஆன் தொகுப்பு நமக்கு உதவுகிறது.


இரண்டு படங்களையும் பார்த்தாலே எளிதில் விளங்கும்.

Thursday, 3 May 2012

மென்பொருள் இல்லாமல் Audio fileகளை convert செய்ய

வணக்கம் எனதருமை நண்பர்களே.. ! மனிதனுக்கு நேரம் ஒன்றுதான் போனால் திரும்பக் கிடைக்காது என்பார்கள். நாம் இருக்கும் வரை அந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கலாமே??

ஏன் நேரத்தைப் பற்றி சொல்கிறேன் என்றால் எனக்கு பதிவுகள் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவே இல்லை. இதனால் எனக்கு வருத்தமே...!

சரி. பதிவிற்கு வருவோம்.


மென்பொருள் பயன்படுத்தாமலேயே சில வேலைகளை இணையத்தில் செய்ய முடியும். அதுபோலதான் இதுவும். Audio கோப்புகளை ஒரு வகை கோப்பிலிருந்து மற்றொரு வகை கோப்பாக மாற்ற நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. எனினும் இந்த மென்பொருள்களில் மாற்றுவதென்பது ஒரு சில படிமுறைகளைப் பயன்படுத்தித்தான் மாற்ற வேண்டும். அவ்வாறில்லாமல் இணையத்திலேயே உங்கள் Audio கோப்புகளை எளிதாக மற்றொரு format க்கு மாற்ற முடியும்.

 

Copyright @ 2013 software shops.