Wednesday, 30 November 2011

ஆன்ட்ராய்டு போன்களுக்கான இலவச SMS corrector!!

sms corrector tool
SMS Corrector
ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் SMS களை வரிசைப்படுத்தி தருகிறது இந்த இலவச மென்பொருள்.

மற்றொரு முக்கியமான சேவையையும் வழங்குகிறது. இம்மொன்பொருள். அதாவது நமக்கு வரும் SMS களை பிழை நீக்கம் செய்து, எளிய முறையில் தந்துதவுகிறது. கடினமான வார்த்தைகளை எளிமைப்ப்டுத்தி தருவதால் மிக எளிதாக நமக்கு வரும் குறுஞ்செய்திகளை படித்து பொருள் அறிந்துகொள்ளலாம்.. இம்மென்பொருளைத் தரவிறக்க உங்கள் ஆன்ட்ராய்டு போன் வழியாக இந்த தளம் செல்லவும்.

Wednesday, 23 November 2011

உங்கள் பிளாக்கரில் Template மாற்றுவது எப்படி?

இது முற்றிலும் புதிய பதிவர்களுக்கு.. நீங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக பிளாக் ஆரம்பிக்கலாம் என்று தொடர்ந்திருப்பீர்கள். நிறைய பயனுள்ள பதிவுகளை எழுதியிருப்பினும், ஒரு சிலர் வலைப்பூவின் வடிவத்தில் கவனம் செலுத்தவோ, வடிவமைப்பு நிரல்களைப் பயன்படுத்தவோ முடியாமல்  இருக்கலாம். .

தொழில்நுட்ப ரீதியில் உங்களுக்கு வலைப்பூவின் வடிவமைப்பில் கவனம் செலுத்த இயலாமல் போயிருக்கலாம்.  இதற்காகவே பல வார்ப்புருக்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது.  இணையத்தில் மூன்றாம் நபர்கள் வடிவமைத்த ஆயிரக்கணக்கான இலவச வார்ப்புருக்கள் கொட்டிக் கிடக்கின்றன..

Saturday, 12 November 2011

இணையத்தில் தரவிறக்கும் வேகத்தை அதிகரிக்க Free Download Manager 3.8 RC1

Free_download_managerஆம். அன்பு நெஞ்சங்களே.. நாம் இணையத்தில்  வீடியோ, மென்பொருள், இப்படி ஏதாவது ஒன்றை டவுன்லோட் செய்துகொண்டிருப்போம்.  டவுன்லோட் செய்துகொண்டிருக்கும்போது இடையில் ஏதேனும் மின்தடையோ, அல்லது பயன்படுத்தும் இணைய இணைப்பில் ஏதேனும் தடங்கல் இருந்தாலோ,  அந்த  தரவிறக்கம் பாதியிலேயே நின்று விடும்.  அவ்வாறு தடை ஏற்பட்டால் மீண்டும் அந்த தரவிறக்கத்தை புதிதாக தொடங்கவேண்டும். இத்தகைய பிரச்னைகளிலிருந்து விடுபட உங்களுக்கென ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Download Manager 3.8 RC1

மென்பொருளிலுள்ள பயன்கள்:

Friday, 11 November 2011

மௌசை தொடாமலேயே VLC Media Player இயக்கலாம்..!!

Short Cuts Of VLC Media Player

பல்வேறுபட்ட பார்மட்களில் உள்ள வீடியோக்களை பார்க்க நாம் பெருமளவு பயன்படுத்தும் Video Player VLC.  இந்த பிளேயரைப் பயன்படுத்த ஒவ்வொருமுறையும் நாம் சுட்டெலியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதானல் நேரம் விரயம் மற்றும் தவறுதலாக வேறொரு ஆப்சன் மீதும் சில சமயம் சொடுக்க நேரிடலாம். இதைத் தவிர்க்கவும், அதிகளவு வசதிகளைக் கொண்டதுமான வி.எல்.சி வீடியோ பிளேயரின் குறுக்கு விசைகள் இங்கு பட்டியிட்டுள்ளேன்.. இனி நீங்கள் கீர்போர்ட்டின் மூலமே இந்த செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முடியும்.

Wednesday, 9 November 2011

உங்கள் பிளாக்கரில் Twitter-ன் ஃபாலோவர் விட்ஜெட் இணைப்பது எப்படி?

நமது பிளாக்கரில் வாசகர்களை அதிகரிக்க பல்வேறு வழிகளை நாடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த பாலோவர் விட்ஜெட்.

பிளாக்கரில் பாலோவர் விட்ஜெட் இருப்பதைப் போன்று , ட்வீட்டருக்கும் ஃபலாவர் விட்ஜெட் இருக்கிறது.  ட்வீட்டரின் ஃபாலோவர்  விட்ஜெட்டை எளிதாக  அமைக்கலாம்.


1. உங்கள் பிளாக்கரில் Design==>>Page Element==>Add Gadget செல்லுங்கள்.

2. அங்கு இருக்கும்  html/javascript gadget என்பதைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

3.கீழிருக்கும் கோடிங்கை காப்பி செய்து  செய்து கொள்ளவும்.

உங்கள் பிளாக்கரில் add to circle widget இணைப்பது எப்படி?

வணக்கம் அன்பு நண்பர்களே. இன்று ஒரு புதிய உபயோகமுள்ள பதிவைப் பார்க்கப் போகிறோம். உங்கள் பிளாக்கில் add to circle widget பட்டன் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

இந்த ஆட் டூ சர்க்கிள் விட்ஜெட்டை உங்கள் தளத்தில் வைப்பதால் உங்கள் வலைதளத்திற்கு வருகை தரும் நண்பர்கள் அவர்களின் சர்க்கிளில் சேர்க்க ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுக்கிறோம். இதனால் உங்களுடைய நண்பர்களின் வட்டம் அதிகமாவதோடு உங்களுடைய தளத்திற்கு வருகை தரும் வாசகர்களும் அதிகமாவார்கள்.

Tuesday, 8 November 2011

google-ல் புதிய blog உருவாக்க

நீங்கள் உங்கள் சொந்த பிளாக் ஆரம்பிக்க வேண்டுமெனில், முதலில் உங்களுக்கு ஒரு கூகுள் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.

இதற்கு முன்பு நீங்கள் ஜிமெயிலை பயன்படுத்துபவராக இருந்தால், அந்த மெயில் ஐ.டி. கொடுத்தும் உள்நுழையலாம்.  இல்லையெனில் புதிதாக gmail அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும்.

நீங்கள் புதியவராக இணையத்திற்கு  இருந்தால் ,
gmail  உருவாக்குவது எப்படி ?  என்ற இந்தப் பதிவைக் காணவும்.

சரி. பிளாக் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

www.blogger.com சென்று உங்களுக்கு ஒரு சொந்த கணக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.




பிறகு உங்கள் gmail முகவரி, மற்றும் மற்ற விவரங்களைக் கொடுத்து கடைசியில் I accept the Terms of Service என்பதனருகில் இருக்கும் சிறு பெட்டியில் கிளிக் செய்துவிடுங்கள்.

Wednesday, 2 November 2011

Gmail-ன் புதிய தோற்றத்தை உடனடியாக பெற..!!

நமக்கு கூகுள் அளிக்கும் பயனுள்ள தளங்கள் பலவகையிருப்பினும், உலகில் அதிகம் விரும்பப்படுவதும்-பயன்படுத்தப்படுவதும் இந்த G-Mail ஒன்றுதான். இந்த ஜி-மெயில் தன்னில் ஒரு புதிய மாற்றத்தை, தோற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. கூகிள் தரும் பல பயனுள்ள தளங்களை புதிய புதிய மாற்றங்களை கொண்டுவந்து கொண்டிருப்பது உங்களுக்கும் தெரியும். மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கு வழி என்பது போல நம்முடைய ஜிமெயிலில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதை இப்பதிவின் மூலம் காணலாம்.

அனைவரும் பயன்படுத்தும் இந்த ஜிமெயிலின் புதிய இலகுவான தோற்றத்தை பெற

1. நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்தவுடன் ஜிமெயில் பக்கத்தின் வலது மூளையில் switch to the new என்றொரு விருப்பம் காட்டப்படும்.

switch-to-the-new-look-image


Tuesday, 1 November 2011

நொடியில் உங்கள் photoக்களை நீங்கள் design செய்ய


நொடியில் உங்கள் புகைப்படங்களை டிசைன் செய்ய



உங்கள் வீட்டு விசேசங்களில் எடுத்த புகைப்பட ஆல்பங்களைப் பார்த்திருப்பிருப்பீர்கள். அழகாக வடிவமைத்து இருப்பார்கள். ஒவ்வொரு புகைப்படத்தையும் தனிப்பட்ட முறையில் டிசைன் செய்து நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருப்பார்கள். உண்மையாகவே நம் புகைப்படம்தானா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு நேர்த்தியாக இருக்கும். இத்தகைய டிசைன்களை நாம் இணையத்தில் மூலமும் எவர் துணையுமின்றி எளிதாக செய்யலாம். இதற்காகவே இந்த தளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆம் நண்பர்களே.. நமது புகைப்படங்களை நொடியில் விரும்பிய படி அழகூட்டலாம். அனிமேட்(amimat)  செய்யலாம். மெருகேற்றலாம்..இதற்கெனவே இந்த தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

Copyright @ 2013 software shops.